dinamalar telegram
Advertisement

அலகுமலை தைப்பூச திருவிழா: பக்தர்கள் பெருத்த ஏமாற்றம்

Share
பொங்கலுார்:அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்.தேரோட்டத்தை கண்டுகளிக்கவும், முருகப் பெருமானை தரிசிக்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். மேலும் தங்கள் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நண்பர்கள், உறவினர்களை சந்திக்கும் ஒரு வாய்ப்பாக தைப்பூச திருவிழா அமைகிறது. இதனால், பொதுமக்கள் திருவிழாவை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement