dinamalar telegram
Advertisement

மானாமதுரையில் தகராறு 3 பேருக்கு வெட்டு

Share
மானாமதுரை :மானாமதுரையில் நேற்று மாலை இரு வேறு சம்பவங்களில் 3 பேர் வெட்டப்பட்டனர். இதில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.மானாமதுரை கோர்ட் எதிர்புறம் பேக்கரியில் ஆலம்பச்சேரியைச் சேர்ந்த சதீஷ் வேலை பார்த்து வருகிறார்.நேற்று மாலை இங்கு கேக் வாங்க வந்த 4 பேர் பேக்கரியில் அமர்ந்து சிகரெட் பிடித்தனர். அங்கிருந்த சதீஷ் சிகரெட் பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த 4 பேரும் சதீஸை கத்தியால் வெட்டினர்.தலையில் காயமடைந்த சதீஷ் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அந்த 4 பேரும் மானாமதுரை சோணையா கோயில் அருகே நடந்து சென்ற போது வெல்டிங் பட்டறையில் வேலை செய்த பாலமுருகன் மற்றும் மாரிமுத்துவை வெட்டியுள்ளனர்.இதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு அவர்களும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement