dinamalar telegram
Advertisement

மானாமதுரையில் பயணப்படி கிடைக்காமல் போலீசார் திண்டாட்டம்

Share
மானாமதுரை, மானாமதுரை சப் டிவிஷனில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான போலீசாருக்கு உணவு,பயணப்படி வழங்காததால் சிரமப்படுகின்றனர்.மானாமதுரை, சிப்காட், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனுார், பூவந்தி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் நுாற்றுக்கணக்கான போலீசார் பணியாற்றி வருகின்றனர்.வெளியூர் செல்லும் போலீசார்களுக்கு ஒரு நாளைக்கு உணவு படியாக ரூபாய் 250 வழங்கப்பட வேண்டும். கடந்த 6 மாதமாக இந்த உணவு படி வழங்கப்படவில்லை. பயணப்படியும் 6 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ளதால் சிரமப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார் போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு உணவு, பயணப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement