dinamalar telegram
Advertisement

கொரோனா விழிப்புணர்வு பொங்கல் கொண்டாட்டம்

Share
Tamil News
திருப்பூர்:திருப்பூர், கோர்ட் வீதியில், மாநகர போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள நுாற்றுக்கணக்கான வீடுகளில் மாநகர, போலீஸ் பிரிவில் பணியாற்றும் போலீசார் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.நேற்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு பலரும் தங்கள் வீடுகளில், பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில், 'கே பிளாக்' வளாகத்தில், கொரோனா பரவலை மையமாக கொண்ட விழிப்புணர்வு கோலம் இடம் பெற்றிருந்தது.பொங்கல் பானை வரைந்து அதற்கு முக கவசம் வரையப்பட்டிருந்தது. அதனருகே, 'கரும்புகள் போல் இடைவெளி, முக கவசம் முக்கியம், நெருப்பு போல் நம்பிக்கை - கொரோனாவை வென்றிடலாம்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த கோலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement