dinamalar telegram
Advertisement

அறிவியல் விழிப்புணர்வு

Share
இளையான்குடி, :தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி சார்பில் மகளிர் சுய உதவி குழு மாணவர்களுக்கான அறிவியல் உருவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.ஒருங்கிணைப்பாளர் ஜெயமுருகன் வரவேற்றார். ஆட்சிக்குழு உறுப்பினர் ஜபருல்லா கான் துவக்கி வைத்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லா கான், சாத்தனி ஊராட்சி தலைவர் சிராஜுதீன், கல்லுாரி தலைவர் அப்துல் அஹத், ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், வேதியியல் துறை தலைவர் செய்யது அபுதாகிர் முன்னிலை வகித்தனர்.இயற்பியல் துறை தலைவர் முஸ்தாக் அகமது கான் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். கடல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி சேஷ் செர்பியா வண்ண மீன்கள் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லுாரி விலங்கியல் துறைத் தலைவர் தயாளன் ஆடுமாடு மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.முகாமில் அரசு அதிகாரிகள் கல்லுாரி முதல்வர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement