dinamalar telegram
Advertisement

மானாமதுரையில் காட்டுப்பன்றிகளால் நெல் விவசாயம் கடும் பாதிப்பு

Share
மானாமதுரை :மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் காட்டுப் பன்றிகளால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பீசர்பட்டினம், ராஜகம்பீரம், கால்பிரவு, முத்தனேந்தல், இடைக்காட்டூர், கட்டிக்குளம், மேலமேல்குடி, கீழமேல்குடி, கொம்புகாரனேந்தல், உள்ளிட்ட கிராமங்களில் கடந்தாண்டு பெய்த தொடர்மழை காரணமாக ஏராளமான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்தனர். தற்போது நெல் பயிர்கள் பால்பிடித்து நன்றாக வளர்ந்து வரும் நேரத்தில் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வயல்களுக்கு காவலுக்கு செல்லும் விவசாயிகளையும் காட்டுப்பன்றிகள் தாக்குவதால் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு ராஜகம்பீரம் காசிராஜன் கூறுகையில், கடந்த வருடம் பெய்த மழையை கொண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து உள்ளனர். காட்டுப்பன்றிகள் தொல்லையால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் மேலும் பயிர் கடனையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.காட்டுப் பன்றிகளை ஒழிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement