dinamalar telegram
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் கன மழையால், பயிர்கள் அழுகி விவசாயம் பாதிப்பு

Share
சிவகங்கை மாவட்டத்தில் 2020-2021ல் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. 2021 தொடக்கத்தில் பெய்த கன மழையால், பயிர்கள் அழுகி விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில் 30 முதல் 90 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு அறிக்கை அளித்தது.பாதிப்பு தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி தெரிவித்தார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் மொத்தமுள்ள 576 வருவாய் கிராமங்களில் 77 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதுவும் குறைவான தொகையே அறிவித்துள்ளது.தேவகோட்டை தாலுகாவில் 18 கிராமங்கள், இளையான்குடியில் 2 கிராமங்கள், காளையார்கோவில் 63 கிராமங்கள், கண்ணங்குடியில் 189 கிராமங்கள், மானாமதுரையில் 12 கிராமங்கள், எஸ்.புதுாரில் 10 கிராமங்கள், சாக்கோட்டையில் 16 கிராமங்கள், திருப்புத்துாரில் ஒரு கிராமம், திருப்புவனத்தில் 7 கிராமங்கள், சிவகங்கையில் மூன்று கிராமங்கள் என மொத்தம் 321 கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் பயிர் காப்பீட்டு நிறுவனம் 77 கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ரூ.18 கோடி மட்டுமே இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் பயிர் இழப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.காளையார்கோவில், இளையான்குடி பகுதியில் பயிரிட்டு அறுவடை செய்துள்ள ஜோதி ரக நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement