dinamalar telegram
Advertisement

பாழடைந்த நாடக மேடை பரிதவிக்கும் பயணிகள்

Share
சிங்கம்புணரி, :சிங்கம்புணரி அருகே பாழடைந்த நாடக மேடையை நிழற்குடையாக பயன்படுத்துவதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.எஸ்.புதுார் ஒன்றியம் மேலவண்ணாரிருப்பு ஊராட்சி மக்களுக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு நாடகமேடை கட்டித் தரப்பட்டது. இந்த நாடக மேடையையே அப்பகுதி மக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் நிழற்குடையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளாக இந்த நாடகமேடை பழுதாகி சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் கட்டுமானம்இடிந்து விழலாம் என்ற நிலையில் அதை இடித்துவிட்டு புதிய நாடக மேடை கட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கட்டடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் புதிய நாடக மேடை கட்டும் பணி தள்ளிப்போகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement