dinamalar telegram
Advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100 பேரை கடந்தது

Share
Tamil News
ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று திடீரெனஅதிகரிக்கும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கைமூன்று நாட்களாக 100 பேரை கடந்தது.ராமநாதபுரம் மாவட்டம்கடந்த ஆண்டில் கடைசி ஏழு மாதங்களாக கொரோனா பாதிப்பு பத்துக்கும் குறைவாக 2 அல்லது மூன்று என்ற அளவில் தான் இருந்தது. கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு அதிகரித்தது.துவக்கத்தில் 13 பேர், 23 பேர், 38 பேர் என இருந்த நிலையில் ஜன.12ல் 116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஜன.13ல் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. 2021 டிச.1 முதல் ஜன.12 வரை 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது 386 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் அதிக பாதிப்பிற்குள்ளான 22 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர். ஜன.,13ல் 55 வயது ஆண் ஒருவர் பலியானார்.ஒருவருக்கு ஒமைக்ரான்: வாலிநோக்கம் அருகே டி.கிருஷ்ணாபுரம் பகுதியைசேர்ந்த 25 வயது இளைஞர் வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் ஊர் திரும்பினார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அதே போல் மண்டபம் பகுதியில் மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அந்த நிறுவனம் பூட்டி சீல் வைக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement