dinamalar telegram
Advertisement

ரவுடிகளை கண்காணிக்கும் போலீசார்

Share
திருவாடானை :பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுஉள்ளது. பொங்கல், மாட்டுப்பொங்கல் என களைகட்டும் விழாவாக இருப்பதால் பிரச்னை ஏற்படாமல்இருக்க போலீசார் உள்ளூர்,வெளியூர் ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாடானை சப்-டிவிசனில் உள்ள திருவாடானை,தொண்டி,எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருப்பாலைக்குடியில் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீநிவாசகன்,முருகேசன்,தேவி,பாலசிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் கூறியதாவது:இந்த சப்-டிவிஷனில் ரவுடிகள் பட்டியலில் 150க்கும் மேற்பட்டவர்கள்உள்ளனர். பண்டிகை காலங்களில் பிரச்னை ஏற்படாமல் இருக்க ரவுடிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று எந்த வித பிரச்னையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறப்பட்டது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து இப்பகுதிக்கு வந்தவர்களையும் கண்காணித்து வருகிறோம், என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement