Load Image
dinamalar telegram
Advertisement

சாயல்குடியில் பரவும் வைரஸ் காய்ச்சல்

சாயல்குடி, சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட சதுரயுகவல்லிநகர், அரண்மனைத்தெரு, வடக்குத்தெரு, அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள்பலர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:குடும்பத்தில் 3 பேர் வரை சளியுடன் கூடிய காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது. பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு செல்லாமல் வீடுகளிலேயே உள்ளனர். வீடுகளில் முன்புறம் தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது.சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடிக்கவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தை சாயல்குடி பேரூராட்சிக்குஉட்பட்ட பகுதிகளில் துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Telegram Banner

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement