dinamalar telegram
Advertisement

காட்சிப்பொருளான மாணவர் விடுதி பல ஆண்டாக தனியார் கட்டடத்தில் இயக்கம்

Share
கமுதி, :கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் அரசு மாணவர்விடுதி சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது.கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எருமைகுளம் கம்மாய்பட்டி, கோவிலாங்குளம் பட்டி, அருந்ததியர் குடியிருப்பு, ஆரக்குடி உட்பட15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்களின் நலன்கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி அருகே மாணவர் விடுதி கட்டப்பட்டது. விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.குறுகிய காலத்திலேயே கட்டடம் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிமென்ட் பூச்சு பெயர்ந்து ஆபத்தானநிலைக்கு மாறியது. இதனையடுத்து மாணவர்களின் நலன்கருதி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே கிராமத்திலுள்ள தனியார் கட்டடத்தில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது.பள்ளி அருகே உள்ள அரசு விடுதி கட்டடம் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.அரசு கட்டடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து மராமத்து பணி செய்து வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மாணவர் விடுதியை அரசு கட்டடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement