dinamalar telegram
Advertisement

கமுதியில் 112 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Share
கமுதி :கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.தலைமை டாக்டர் அசோக் கூறியதாவது:கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.கொரோனா முதல் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப் பிட்ட காலத்திற்குள் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி, இருமல் உட்பட அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டரின் பரிந்துரையின் படி மருந்து உபயோகப்படுத்த வேண்டும்.முன்களப்பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திகொள்ள அரசு உத்தரவிட்டுஉள்ளது. கமுதி பகுதியில் போலீசார் மற்றும் முன்களப்பணியாளர்கள் 112 பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுஉள்ளது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement