dinamalar telegram
Advertisement

களைகட்டியது கரும்பு விற்பனை! கோவையில் பொங்கல் கோலாகலம்

Share
Tamil News
கோவை:கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாலையோரங்களில் கரும்பு விற்பனை களை கட்டியது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக பொது இடங்களில் சமுதாய பொங்கல் போன்ற விழாக்கள் நடத்தப்படவில்லை.எனினும், கோவையில் அவரவர் இல்லங்களில் பாரம்பரிய பொங்கல் வைத்து, படையல் இட்டு வழிபடும் நிகழ்ச்சி, வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. புத்தாடை அணிந்தும், பலகாரங்களை உண்டும், மக்கள் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டம் கூடுவதை தவிர்க்க, கோவில்களில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. எனினும் மருதமலை முருகன் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர்.நடை அடைக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், கதவு முன்பாக கற்பூரம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர்.பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமான, கரும்பு விற்பனை கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று களை கட்டியிருந்தது.சாலையோரங்களில், தற்காலிக கடைகள் முளைத்திருந்தன. ஜோடி 80 முதல் 120 ரூபாய் வரையிலான விலையில் கரும்பு விற்பனை செய்யப்பட்டது.விடுமுறை நாள் என்பதால், மாநகர சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. பஸ்களிலும் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement