dinamalar telegram
Advertisement

தடையை மீறி காளை விடும் விழா; 100 பேர் மீது வழக்கு

Share
கலசப்பாக்கம்-திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட வீரளூர், மேல்சோழங்குப்பம், கடலாடி, கீழ்பாலுார் ஆகிய நான்கு கிராமங்களில் நேற்று முன்தினம், போகி பண்டிகையை முன்னிட்டு காளை விடும் விழா நடந்தது. கொரோனா தொற்று காரணத்தால், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசாரின் அனுமதி பெறாமல் காளை விடும் விழா நடத்திய, நான்கு கிராமத்தில் உள்ள விழா குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கால்நடைத்துறை டாக்டர் வித்யாசாகர் கடலாடி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் மீது கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement