dinamalar telegram
Advertisement

கலை விருதுகள் பெறுவதற்கு பிப்.12க்குள் விண்ணப்பிக்கலாம்

Share
ராமநாதபுரம், :ராமநாதபுரம் மாவட்ட கலைஞர்கள் கலை விருது பெற பிப்.12க்குள் விண்ணப்பிக்கலாம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 2018 வரை 80 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2018 --2019 மற்றும் 2021-2022 ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்கப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட கலை மன்றம் சார்பில் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். கலெக்டர் தலைமையிலான தேர்வாளர் குழு இவர்களை தேர்வு செய்யும்.பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல் பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நய்யாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம்,கணியான் கூத்து, ஓவியம்,சிற்பம், அரசன் அரசி ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன்குறத்தியாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை முதலான செவ்வியல் கலைகள் நாட்டுப்புற கலைகளாக உள்ளன.இவற்றில் சிறந்து விளங்குவோர் திறமைகளுக்கான சான்றுகள், ஆதார் அட்டை நகல், வயது சான்று, முகவரி சான்று, அடையாள அட்டை, உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் காலனி, தல்லாகுளம்(அ), மதுரை--625 002 என்ற முகவரிக்கு பிப்.12க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.இதன்படி 18 வயதிற்குஉட்பட்டோருக்கு கலைஇளமணி, 19--35வயதிற்குள் கலைவளர்மணி, 36- 50 வரை கலைசுடர்மணி, 51--65 வரை கலைநன்மணி, 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதுகள் வழங்கப்படும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement