dinamalar telegram
Advertisement

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடரும்: சி.இ.ஓ.,

Share
கோவை:நீட் பயிற்சி வழக்கம் போல் 'ஆன்லைன்' வாயிலாக தொடரும் என, சி.இ.ஓ., கீதா தெரிவித்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்படி, பல மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கை கிடைக்க வாய்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நீட்., நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம் என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய பயிற்சியை வழங்குவதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டியது அவசியம். கொரோனா காரணமாக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதிலேயே, பல்வேறு சிரமங்கள் தொடர்வதால், நீட் பயிற்சியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ.,) கீதாவிடம் கேட்டபோது, ''அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு, 'வாட்ஸ் அப்' மூலம் கேள்வித்தாள் அனுப்பி, மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில், 600 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.தற்போது,100 மாணவர்கள் இப்பயிற்சியில் தொடர்கின்றனர். நேரடி வகுப்புகளுக்கு சூழல் அமையாமல் இருப்பினும், ஆன்லைன் மூலம் கட்டாயம் பயிற்சி தொடரும். உரிய அறிவுறுத்தல்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement