dinamalar telegram
Advertisement

அபாய கட்டத்தில் குடியிருப்புகள்

Share
திருவாடானை வீட்டுவசதிவாரிய குடியிருப்புகள் இடியும் அபாயத்தில் இருப்பதால் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.திருவாடானை பாரதிநகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் 42 வீடுகள் கட்டபட்டது. ஏ.பி.சி.டி., என நான்கு வகையாக கட்டபட்ட இக் கட்டடத்தில் அரசு அலுவலர்கள் குடியிருந்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேலானதால் வீட்டின் சுவற்றில் விரிசல், மழை காலத்தில் அடிக்கடி சிலாப் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனால் குடியிருப்போரை காலி செய்ய உத்தரவிட்டதால்சில ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் காலி செய்தனர்.இக் கட்டடம் அருகே வேளாண்மை அலுவலகம், வளர்கல்வி திட்ட அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. ஆபத்தான இக் கட்டடத்தை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement