dinamalar telegram
Advertisement

சுற்றுலா மந்தம்: ஊட்டி வெறிச்

Share
Tamil News
ஊட்டி-- -கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, விழா நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டதால், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் திருநாளன்று, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொங்கல் விழா நடத்த தடை விதிக்கப்பட்டது.நேற்று பூங்காவின் புல்தரை மைதானம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது. இதேபோல, படகு இல்லம், பைக்காரா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement