dinamalar telegram
Advertisement

தென்மாநில பாடி பில்டிங்: கோவை பெண் முதலிடம்

Share
கோவை,;தென்காசியில் நடந்த தென் மாநில அளவிலான 'பாடி பில்டிங்' போட்டியின் பெண்கள் பிரிவில், கோவையை சேர்ந்த வீராங்கனை முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.தமிழ்நாடு மாநில ஐ.எப்.எப்., தென்காசி மாவட்ட, ஐ.எப்.எப்., சார்பில் தென் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'பாடிபில்டிங்' மற்றும் 'பிட்னஸ் சாம்பியன்' போட்டி, தென்காசியில் நடந்தது.இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 'சப்- ஜூனியர்', 'ஜூனியர்', 'சீனியர்', ஆகிய பிரிவுகளில் வெவ்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் கோவையை சேர்ந்த, 38 வயதான வினோதமலர், 60 கிலோ எடை பிரிவில் 'பாடி பில்டிங்' மற்றும் பிட்னஸ் சாம்பியன் ஆகிய இரு பிரிவுகளிலும், முதல் இடத்தை பிடித்து, ஆசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற வீராங்கனைக்கு ரொக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement