dinamalar telegram
Advertisement

சிட்டி கிரைம்: திருநங்கைகள் அட்டகாசம்

Share
நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் திலகன், 25; சி.என்.சி.,ஆபரேட்டர். இவர் ஜன.,10ம் தேதி காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் குடிபோதையில் வந்த திருநங்கைகள் மூவர், அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். தர மறுத்த தமிழ் திலகனை சரமாரியாக தாக்கினர். காயமுற்ற அவர், ஊட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறுவனிடம் கைவரிசை
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ஜெபசீலன். தகவல் தொழில்நுட்ப நிறுவன அதிகாரி. உறவினர் திருமணத்துக்காக, மனைவி, மகனுடன் உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ.,இம்மானுவேல் சர்ச்சுக்கு வந்திருந்தார். அங்கு அவர்களது இரண்டரை வயது மகன், மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த மர்ம நபர், சிறுவன் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துக் கொண்டு ஓடினார். சிறுவன் சத்தம் போட்டதும், அருகே இருந்தவர்கள் அந்நபரை பிடித்தனர். விசாரணையில் அந்த நபர், பாலக்காடு, வாளையாரை சேர்ந்த கிரீஷ், 40, என்று தெரிந்தது. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாலிக்கொடி திருட்டு
கோவை வேலாண்டிபாளையம் மணியகாரர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன், 28. ஆழ்துளை கிணறு அமைக்கும் வேலை செய்பவர். தன் மனைவிக்கு ஒன்றரை பவுனில், புதிய தாலிக்கொடியை ஆனந்தன் வாங்கி வந்திருந்தார். பீரோவில் இருந்த தாலிக்கொடி, ஜன.,6ம் தேதி திருடு போனது. விசாரித்த போலீசார், 25 வயது பெண் ஒருவரை கைது செய்து, தாலியை பறிமுதல் செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    திரு நங்கைகள் தொல்லை தாங்க முடியவில்லை. பஸ், ரயில்களில் பணம் கேட்டுத் தொல்லை தருகின்றனர். தராவிட்டால் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்கள். அரசும், சட்டமும் அவர்களுக்கு எல்லை மீறி சலுகை அளிப்பதால் நாங்கள் ஏதும் செய்யமுடிவதில்லை.

Advertisement