dinamalar telegram
Advertisement

ஆயிரத்தெட்டு லிங்கங்களுடன் ஆத்மலிங்கேஸ்வரர்

Share
Tamil News
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அதிகாரிபட்டி அருகே உள்ளது காம்பார்பட்டி. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உருவானது
'ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை மாதா புவனேஸ்வரி அம்மன் கோவில்'. எத்தனையோ சிறிய, பெரிய விதவிதமான லிங்கங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரே இடத்தில் 1008 சிவலிங்கங்களை இங்குதான் காணலாம்.

தல வரலாறு



சிவத்தொண்டர் சச்சிதானந்த சாமிகள், ''பல யுகங்களுக்கு முன் சித்தர் ராமதேவர் எப்போதும் இங்கு வழிபாடு செய்ததாகவும், ஒரு பெரிய சிவன் கோவில் இந்த

இடத்தின் அடியில் இருந்ததை இவர் ஞானப்பார்வையால் அறிந்ததாகவும்'' கூறுகிறார்.இறையனார் சிவன் மேல்கொண்ட அன்பின் உச்சநிலை இக்கோயில். மக்களின் துயர் தீர்க்கும் ஒரு கோயிலாக இது அமைய வேண்டும் என்ற இவரது விருப்பத்தால் 1998ல் ஆரம்பித்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் புவனேஸ்வரியம்மாள் உடனுறை ஆத்மலிங்கேஸ்வரர் ஆலயமாக முதல் கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. பரிவார தெய்வங்களும், ராஜகோபுரமும் கட்டப்பட்டு 2வது கும்பாபிேஷகம் 2012, மே 6 ல் நடத்தப்பட்டது.

கோயில் உருவான வரலாறு



ஒரு நாள் இவர் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் லிங்கத்திலிருந்து தோன்றிய சிவன், 2016 சிவலிங்கங்களும் ஒரு சகஸ்ரலிங்கமும், 1007 லிங்கங்களும் கட்டி, பிரதிஷ்டை செய்யுமாறு கூறியதும், இறையனார் சிவன் லிங்கத்திற்குள் மறைந்து விட்டாராம். அந்த சிவனின் அருளால் இதற்கான நிலம் கிடைக்கப் பெற்றதும், வேலைகளை இவர் துவங்கினார். இதுவரை மக்கள் 1008 சிவலிங்கங்களை தானமாக வழங்கி உள்ளனர். இங்குள்ள சிறப்பே ஒரே கோவிலில் 1008 சிவலிங்கங்கள்;
80 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 20 அடி நீளம் கொண்ட பிரமாண்ட பள்ளி கொண்ட பெருமாள்; மாவட்டத்திலேயே பெரிய நந்தீஸ்வரர்; திருமாலின் மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், வாமன
அவதாரம், நரசிம்மாவதாரம், பரசுராம அவதாரம், பலராம அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் 9 அவதாரங்கள் இங்குள்ளது.


இங்குள்ள சரச லிங்கத்தில் 42 க்கு 24 என்ற வரிசையில் 1008 லிங்கங்கள் பொறிக்கப்பட்ட ஒரே லிங்கமாக காட்சி அளிக்கிறது, பஞ்சமுகலிங்கம்- எனும் ஐந்து முகங்கள் கொண்ட லிங்கமும் இங்குள்ளது.
கொடிமரத்தில் நான்கு பக்கமும் பிரம்மா, சரஸ்வதி, லிங்கம், நந்தீஸ்வரர் என இடம் பெற்றிருப்பது கொடி மரத்தின் சிறப்பு.மேலும் இங்கு மாதா புவனேஸ்வரி அம்மன், ஆத்மலிங்கேஸ்வரர், பாலமுருகன், காசிலிங்கம், மகாலட்சுமி, சித்தி விநாயகர், நாகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரர், கால பைரவர், முருகப் பெருமான், விஷ்ணு, தன்வந்திரி, நவ கிரகங்கள், ஆஞ்சநேயர், நந்தீஸ்வரர் மற்றும் 1008 சிவலிங்கங்கள், என அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம்.
இவை தவிர காவல் தெய்வங்களான கருப்பசாமி, அய்யனாரும் உள்ளனர். ஐயப்பன், நடராஜர் சிலைகள் தயாராகி வருகிறது.

சிறப்பு பூஜைகள்


மகா சிவராத்திரி அன்று விடிய விடிய சிறப்பு பூஜைகள் 1008 லிங்கங்களுக்கும் நடைபெறும். ஒவ்வொரு பிரதோஷம், சஷ்டி, சங்கடகர சதுர்த்தி, அமாவாசை பூஜைகளும் உண்டு. தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். தினமும் காலை 6:00 - 11:00 மணி, மாலை 4:00 - 8:30 மணி கோயில் திறந்திருக்கும். காலை 6:00 - 8:00 மணிக்கு பூஜை நடைபெறும்.


எப்படி செல்வது


திண்டுக்கல் - நத்தம் ரோட்டில் 21 கி.மீ.,யில் கோபால்பட்டி. அங்கிருந்து 15கி.மீ.,யில் கோயில் அமைந்துள்ள காம்பார்பட்டி உள்ளது. நத்தத்தில் இருந்து சென்றால் 12 கி.மீ.,யில் கோபால்பட்டி உள்ளது. கோயிலை 97903-20737ல் தொடர்பு கொள்ளலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement