dinamalar telegram
Advertisement

பழங்குடி மக்கள் பொங்கல் விழா

Share
Tamil News
ஊட்டி,-- -நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே, ஷூட்டிங் மட்டம் பகுதியில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று தோடர் இன மக்கள் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த இரண்டாண்டுகள் இங்கு பொங்கல் விழா நடத்தப்படவில்லை. நடப்பாண்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தோடர் இன மக்கள் பொங்கல் விழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்று ஷூட்டிங் மட்டம் பகுதியில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், தோடர் இன மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.

கோலமிட்டு, கரும்புகள் வைத்து அடுப்பில் புதிய மண்பானைகள் வைத்து பொங்கல் வைத்தனர். பின், சுற்றுலா பயணிகளுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர். பூஜைக்கு பின், அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement