dinamalar telegram
Advertisement

கொரோனா நெறிமுறை மீறல்: ரூ.84 ஆயிரம் அபராதம் வசூல்

Share
கோவை:கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத காரணங்களுக்காக மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் சேர்த்து, 84 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயம், குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள், பேக்கரி, கடைகள் உள்ளிட்டவற்றில் சமூக இடைவெளி, துாய்மை பேணுதல் உள்ளிட்ட நோய் தடுப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.கிழக்கு மண்டலத்தில், மாஸ்க் அணியாதவர்களிடம், 10 ஆயிரத்து, 200 ரூபாய், கொரோனா தடுப்பு அம்சங்களை கடைபிடிக்காத நிறுவனங்கள், கடைகளில் 6,800 என, 17 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.வடக்கு மண்டலத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம், 4,400 ரூபாய், வணிக நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, துாய்மை பேணாதது என கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத காரணங்களுக்காக, 11 ஆயிரத்து, 500 ரூபாய் என, 15 ஆயிரத்து, 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.தெற்கு மண்டலத்தில் 9,400 ரூபாய், கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட வணிக நிறுவனங்கள், கடைகளிடம், 11 ஆயிரம் என, 20 ஆயிரத்து, 400 ரூபாய், மேற்கு மண்டலத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம், 12 ஆயிரத்து, 200 ரூபாய், விதிமீறிய நிறுவனங்கள், கடைகளில் 9,000 ரூபாய் என, 21 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளது.மத்திய மண்டலத்தில், 6,400 ரூபாய், நோய் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காததற்காக நிறுவனங்கள், கடைகளிடம், 3,800 ரூபாய் என, 10 ஆயிரத்து, 200 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஐந்து மண்டலங்களிலும் சேர்த்து, 84 ஆயிரத்து, 700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement