dinamalar telegram
Advertisement

சாதித்தவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

Share
கோவை:ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில், பதக்கங்கள் வென்ற கோவை வீரர்கள், முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சர்வதேச வலுதூக்கும் சம்மேளனம் மற்றும் ஆசிய வலுதூக்கும் சம்மேளனம் இணைந்து நடத்திய ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி துருக்கி, இஸ்தான்புல் நகரில் நடந்தது.இப்போட்டியில், 20க்கும் மேற்பட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்திய அணிக்கு, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 68 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்போட்டியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வீரர்கள், 20 பதக்கங்களை வென்றனர். வெற்றி பெற்ற வீரர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் கோவை மாவட்ட கலெக்டர் சமீரனையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement