dinamalar telegram
Advertisement

எழுமலையில் குடிநீர் வழங்கல்

Share
எழுமலை, :எழுமலை பேரூராட்சியில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் உள்ளூர் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. புதிதாக குடியிருப்பு, வணிக பயன்பாட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற விரும்புபவர்கள் வீட்டு வரி ரசீது, குடிநீர் இணைப்புக்கான தொகையை வங்கியில் செலுத்திய விபரம் ஆகியவற்றை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். ஏற்கனவே இணைப்பு பெற்றவர்கள் மின்மோட்டார் வைத்து குடிநீரை திருடினால், இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement