dinamalar telegram
Advertisement

கொரோனா நோயாளிகள் கொண்டாடிய பொங்கல்!

Share
Tamil News
கோவை:கொடிசியா வளாகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள, கொரோனா நோயாளிகள் பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர்.கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க கொடிசியா வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவல் குறைந்ததால் இம்மையம் மூடப்பட்டது. தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளதால் மீண்டும், கொடிசியா வளாகத்தில், 700 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதில் பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று பொங்கல் வைத்து கரும்பு, பழங்களுடன் அனைவரும் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து நோயாளிகள் கும்மியடித்து, பாட்டுப்பாடி, பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement