dinamalar telegram
Advertisement

7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை துவக்கம்

Share
விழுப்புரம் : ஏழு ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து இளங்காட்டிற்கு, இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் சேவை கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இப்பகுதிக்கு மீண்டும் பஸ் சேவையை துவங்க வேண்டும் என எம்.எல்.ஏ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, லட்சுமணன் எம்.எல்.ஏ., இளங்காட்டிற்கு பஸ் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.அதன்படி, நேற்று இளங்காட்டில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ் சேவையை லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, வளவனுார் பேரூராட்சி செயலாளர் ஜீவா, அவைத் தலைவர் கண்ணப்பன், சேர்மன் சச்சிதானந்தம், ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி குணசேகரன் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement