dinamalar telegram
Advertisement

தந்தை நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

Share
Tamil News
சென்னை--முதல்வர் ஸ்டாலின் நேற்று புத்தாடை அணிந்து, தன் மனைவி துர்காவுடன், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து புறப்பட்டு, கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று, தன் தாயிடம் வாழ்த்து பெற்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தன் தந்தை கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.பின், வெளியே வந்த அவர், எதிர் வீட்டிற்குச் சென்று, அங்கு வசிப்பவர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.பின், மெரினா கடற்கரைக்கு சென்று, முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் நினைவிடத்தில், பூக்கள் வைத்து மரியாதை செலுத்தினார். வழியில் அவரை வரவேற்ற கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்றனர்.-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement