dinamalar telegram
Advertisement

ரேடியோ ஸ்டேஷன்கள் மூடுவதை தடுக்க வலியுறுத்தல்

Share
மதுரை :தமிழ்நாடு, புதுச்சேரியில் இயங்கும் ஐந்து ரேடியோ ஸ்டேஷன்களை மூடுவதை தடுக்க வேண்டும் என மதுரையில் ரேடியோ ஸ்டேஷன் பாதுகாப்பு குழுவினர் வலியுறுத்தினர்.ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம் தலைமையில் குழுவினர் கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள ரேடியோ ஸ்டேஷன்கள் தற்போது சுயமாக நிகழ்ச்சி தயாரித்து ஒலிபரப்பி வருகின்றன. தற்போது சென்னை ஸ்டேஷனில் மட்டும் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு, பிற ஸ்டேஷன்களும் அதை நேரடி ஒலிபரப்பு செய்யும் நிலைக்கு மாற்றப்படவுள்ளன.ஒவ்வொரு ஸ்டேஷனும் அந்தந்த பகுதிக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்பி வருகின்றனர். இதன் மூலம் ரேடியோ கேட்கும் மாவட்டங்களின் சிறப்பு தன்மை வெளிக் கொண்டு வரப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களுக்கான தகவல் அளிக்கப்படுகின்றன.மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. பெண்கள் நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதி பெண்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். எனவே ரேடியோ ஸ்டேஷன்களை படிப்படியாக மூடுவது ஏற்புடையதல்ல. தற்போது இயங்கும் ஆறு ஸ்டேஷன்களும் சுயமாக இயங்கும் நிலையங்களாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.வர்த்தக சங்கம் கண்டனம்இதற்கிடையே மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், இம்முடிவு வானொலி கேட்கும் மக்களை பாதிக்கும்.மீனாட்சி திருக்கல்யாணம், வைகையில் கள்ளழகர் இறங்குதல், தெப்பத் திருவிழா, ஜல்லிக்கட்டுஉட்பட பிரதமரின் மான் கீபாத் போன்ற நிகழ்ச்சிகள், பயனுள்ள செய்திகளை ஒலிபரப்பும் மேற்கண்ட ஸ்டேஷன்களை மூடுவதை கைவிட வேண்டும். ரிலே நிலையங்களாக மாற்றாமல் வருவாய் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement