Load Image
dinamalar telegram
Advertisement

மாநகரில் போக்குவரத்து நெரிசல்: எளிதாகணும் பயணம்! இணைப்புச்சாலைகளால் தீரும்:தன்னார்வ அமைப்பு யோசனை

Tamil News
ADVERTISEMENT
கோவை:கோவையில் செயல்படுத்தும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்கள், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள், புதிதாக ரோடு போடுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகளை, தமிழக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, 'சிறுதுளி' மற்றும் 'ராக்' அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தனர்.

கோவையில் உள்ள முக்கியமான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முதல்கட்டமாக, 8 இணைப்புச்சாலைகள் உருவாக்க, கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.'ராக்' அமைப்பு தலைவர் பாலசுந்தரம் பேசியதாவது:திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மற்றும் பாலக்காடு என, 40 கி.மீ., சுற்றளவில் மையப்பகுதியில் கோவை அமைந்திருக்கிறது. 2020ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 27.66 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இன்னும், 10 ஆண்டுகளில் 55 லட்சம் வாகனங்கள் ஓடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.எனவே, ரோடுகளை விரிவுபடுத்த வேண்டும்; உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
1994ல் அறிவித்த மாஸ்டர் பிளானில், சுற்றுச்சாலை மற்றும், 100 திட்டச்சாலை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. சில திட்டச்சாலைகள் மட்டும் ஏற்படுத்தப்பட்டன. இன்னும், 8 இணைப்பு சாலைகள் உருவாக்கினால், போக்குவரத்து எளிதாகும்.தேவையான முக்கிய சாலைகள்n பன் மால் ரோட்டில் இருந்து பி.எஸ்.ஜி., வழியாக பி.பி.எஸ்., காலனி ரோடு விரிவாக்கம் செய்து, அண்ணா நகர் ரோடு வழியாக பீளமேடு வரதராஜா மில் வரை வந்தடையும் வகையில், இணைப்பு சாலை உருவாக்க வேண்டும். நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து, சுங்கம் பைபாஸ் வந்தடைய சிவராம் நகர் வழியாக, 100 அடி திட்டச்சாலை ஏற்படுத்த வேண்டும்.
ஆத்துப்பாலத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை இணைப்பு சாலை வேண்டும்n கொடிசியா ரோட்டில் கீதாஞ்சலி பள்ளிக்கு அருகே துவங்கி, என்.ஆர்.ஐ., கார்டன் 80 அடி மெயின் ரோடு வரை, இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.n பீளமேட்டில், ராதாகிருஷ்ணா மில்ஸ் மற்றும் பழமுதிர் நிலையத்துக்கு இடையே உள்ள சவுரிபாளையம் ரோட்டில், 370 மீட்டர் நீளத்துக்கு ரோட்டை விஸ்தரிக்க வேண்டும்.
அவிநாசி ரோட்டில் இருந்து மீனா எஸ்டேட் செல்லும் ஹிந்துஸ்தான் கல்லுாரி ரோட்டை, 1,050 மீட்டர் துாரத்துக்கு விரிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் வலியுறுத்தினார்.அரசு செயலர் ஷிவ்தாஸ் மீனா பதிலளிக்கையில், ''கோரிக்கை வைத்துள்ள, 8 இணைப்பு சாலைகளில், 5க்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மீதமுள்ள, 3 சாலைகளை உருவாக்க, நிலம் கையகப்படுத்த வேண்டும். நிலங்களை தானமாக வழங்கினால், இணைப்பு சாலை அமைத்துக் கொடுக்க தயாராக இருக்கிறோம்,'' என்றார்.பார்ப்போமே எத்தனை பேர் தானமாக நிலம் வழங்குகிறார்களென்று!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Ram Pollachi -

    இனி நிலங்களை தானமாக கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். பணம் தன் மதிப்பு, மரியாதையை இழந்து நிற்க காரணம் நிலத்தின் மதிப்பு உயர்வே.

Advertisement