dinamalar telegram
Advertisement

முதல்வருக்கு ஓய்வூதியர் கடிதம்

Share
கோவை-'முதல்வர் எங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி துயர் துடைக்க வேண்டும்' என, அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,'கடந்த ஆறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வை பெறாமலேயே இறந்துவிட்டனர். மருத்துவ காப்பீடு திட்டமும் எங்களுக்கு நிறுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான கடிதங்கள் தங்களுக்கு அனுப்பியும் இதுவரை நடவடிக்கையில்லை.

லாபநோக்கமின்றி இயக்கப்படும், 6,500 மலைப்புற, கிராமப்புற பஸ்களின் இயக்க செலவை, அந்தந்த ஆண்டுகளில் அரசிடமிருந்து பெறத் துணிவில்லாத அதிகாரிகள், 85ஆயிரம் ஓய்வூதியர்குடும்பத்தினரின் வயிற்றில் அடிப்பது சுலபமாக இருந்தது. இதனால், இன்றும் எங்கள் தேவைகளுக்காக போராடி வருகிறோம். முதல்வர் எங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி துயர் துடைக்க வேண்டும்; தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement