dinamalar telegram
Advertisement

விடுமுறை நாள் பஜார்

Share
Tamil News
அவிநாசி:அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல், பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாலையோர கடைகள் அமைப்பதை வியாபாரிகள் வழக்கமாக கொண்டுள்ளனர்.ரெடிமேடு ஆடை துவங்கி, பேன்சி பொருட்கள், காலணி உட்பட வீட்டுக்கு தேவையான பொருட்கள் என, அனைத்தும் கிடைக்கும். பெரும்பாலும், பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தான் இச்சாலையோர கடைகளின் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.பொங்கல் விடுமுறைக்கு வட மாநில தொழிலாளர்கள் பலர் வெளியூர் செல்லவில்லை. நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நிறுவன விடுதிகளில் தங்கியுள்ள அவர்கள், கடை வீதிக்கு சென்று, பொழுது போக்குகின்றனர்.இந்நிலையில், அவிநாசியில் பொங்கல் விடுமுறையையொட்டி சாலையோர கடைகளை வியாபாரிகள் அமைத்துள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் தேவையானவற்றை கடைகளில் இருந்து வாங்கினர். உள்ளூர் மக்களும் பொருட்களை வாங்குகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement