dinamalar telegram
Advertisement

தொல்லியல் எச்சங்கள் பெரம்பலுார் அருகே ஆய்வு

Share
Tamil News
பெரம்பலுார்--தமிழ்நாடு அரசு புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், -பெரம்பலுார் அருகே, தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்தனர்.பெரம்பலுார் மாவட்டத்தில் காரை, அயனாவரம், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில், பல நுாறு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.தொல்லியல் எச்சங்கள் காணப்படும் காரை உள்ளிட்ட பகுதிகளை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் நிர்மல்ராஜ், பெரம்பலுார் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். தொல்லியல் எச்சங்கள் காணப்படும் அரசு புறம்போக்கு நிலம், தனியார் நிலம் ஆகிய விபரங்களை சேகரித்தனர்.ஆய்வில் கண்டறியப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் எச்சங்களை பாதுகாப்பது மற்றும் காட்சிப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement