dinamalar telegram
Advertisement

ஒரு போன் போதுமே... மூச்சுத்திணறல்

Share
அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் மெயின் ரோட்டில், கே.ஆர்.ஜி., அபார்ட்மென்ட் அருகே குப்பை, கழிவுகளை கொட்டி தீ வைப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.-கணேசன், அவிநாசிலிங்கம்பாளையம்.
பணிகள் மந்தம்
ஊத்துக்குளி ரோடு - வளம்பாலம் இணைக்கும், யூனியன் மில்ரோடு சிமென்ட் சாலை பணி படுமந்தமாக நடக்கிறது. இதனால், மூன்று கி.மீ., சுற்றி மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்கின்றன. பணியை விரைந்து முடிக்க வேண்டும்.-தங்கமணி,கே.பி.என்., காலனி.
வீணாகும் தண்ணீர்
திருப்பூர் பழனியம்மாள் பள்ளி வீதி, பெரியகடைவீதியில் இரண்டு இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் தொடர்ந்து வீணாகிறது. குழாய்களை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-ராஜேஷ்கண்ணா, திருப்பூர்.
இருள் சூழ்ந்த பகுதி
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் கூடுதல் விளக்கு பொருத்த வேண்டும். நுாற்றுக்கணக்கான பெண்கள் காத்திருக்குமிடத்தில் போதிய வெளிச்சமின்றி கும்மிருட்டாக காணப்படுகிறது.-ராஜூ, குமரன் ரோடு.
தபால் ஆபீஸ் திறக்க தாமதம்
திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் எப்போதும் தாமதமாக திறக்கப்படுகிறது. தினமும் காலையில், 50க்கும் அதிகமானோர் வந்து அலுவலகம் முன் காத்திருக்கின்றனர்.10:15 மணிக்கு பின்பே அலுவலகம் திறக்கப்படுகிறது. உயரதிகாரிகள் ஆய்வு செய்திட வேண்டும்.- சஞ்சய்ராஜ், சபாபதிபுரம்.
பல்லாங்குழி ரோடு
திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் இருந்து காலேஜ்ரோடு செல்லும் சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். புதிய ரோடு அமைக்க வேண்டும்.- சந்தோஷ்குமார்,15 வேலம்பாளையம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement