dinamalar telegram
Advertisement

தி.மு.க., வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?

Share
நாமக்கல்-''கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்ற வேண்டும்,'' என, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறினார்.

அவரது பேட்டி:தமிழகத்தில் கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் என, 44 சர்க்கரை ஆலைகள் இயங்கின. தற்போது, 10 ஆலைகள் மூடப்பட்டு, 34 மட்டுமே செயல்படுகின்றன. காரணம், போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமல், சாகுபடி பரப்பளவு குறைந்தது, சர்க்கரை தொழில் லாபகரமாக இல்லாததே.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், 'கரும்பு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அரவை பருவம் மற்றும் நெல் அறுவடையும் துவங்கிய நிலையில், தமிழக அரசு, 'சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்' என்பதை பொய்யாக்கியுள்ளது. இது, விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக கரும்பு மற்றும் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.நடப்பு ஆண்டு விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Dr G Ranganathan - Coimbatore,இந்தியா

    நியாயமான செய்தி. தமிழக அரசியல் கட்சிகள் விவசாயத்தை பற்றி பேசுவதும் செய்வதும் அனைத்தும் பிற்போக்கானவை.....உதட்டளவான வெறும் பேச்சு. 1. அதற்கான அடிப்படை காரணம் இதோ: இன்றைய நிலையில் விவசாய தொழில் சார்ந்த 50% மக்கள் ஒன்று சேர்ந்தால் அரசியல் செய்வது இயலாத காரியம். எனவே அவர்களுக்கு ஏதோ போக்கு காட்டுவதும் பிரித்தாளுவதும் முக்கியமானது. அதன் மூலமாக நாட்கள் ஓடினால் கட்சிகளுக்கு நிம்மதி. 2. தொழில் துறை அரசியலார் மற்றும் அதிகாரிகள் (மும்மூர்த்திகளும்) இணைந்து விவசாயிகளை புறக்கணிப்பதாக கற்பனை செய்து கொண்டு தங்களது தலையில் எரியும் கொள்ளியை வைத்தது தேய்த்தது அடுத்த நிகழ்வு... இதோ நிரூபணம்... இங்கு விளைந்த பருத்தியால் 1950 முதல் '80 வரையான காலகட்டத்தில் பருத்தி (காட்டன்) ஆலைகள் வளர்ந்தன. அப்போதைய விவசாயிகளின் பிரச்சினையை ஒருகாசு கூட செலவு செய்யாமலே தீர்க்க உதவியிருக்க முடியும்... ஆனால் மனமில்லை... இப்போது தமிழகத்தில் இயங்கும் பருத்தி, ஆயத்த ஆடை நிறுவனங்கள் வடக்கே இருந்து கிடைக்கும் (இந்திய மற்றும் அயல்நாட்டு) பருத்தி வரவை சார்ந்து சிரமப்பட்டுக் கொண்டு உள்ளன. அவையனைத்தும் முழுவதும் நலிந்து மூடப்படும் காலம் வெகுதூரமில்லை. அதே நிலையை இப்போது கரும்பு சாகுபடியைப் பற்றி இந்நிலையில் கண்டும்காணாமல் இருக்கும் மும்மூர்த்திகள் எதிர்காலத்தில் அடைவார்கள். என்ன செய்வது? நாங்கள் கேட்டால் சுயநலம் என்று பலர் நினைத்துக் கொள்கின்றனர். வணக்கம் முனைவர் ரங்கநாதன் மாநில செயற்குழு தமிழக விவசாயிகள் சங்கம்

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.அது போல் தான் ஸ்டாலின் விடும் அறிக்கைகள் எதுவும் நடை முறைக்கு வராது. அதிலும் உங்கள் சங்கத்திலேயே ஒரு திருடன் உள்ளான் அவன் ஸ்டாலினிடம் வரவேண்டியதை வாங்கி கொண்டு மற்ற விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறான் .

Advertisement