dinamalar telegram
Advertisement

வாகனம் திருட்டு :போலீஸ் விசாரணை

Share
அவிநாசி,:அவிநாசி, சூளை, சாலைப்பாளையம் ரோடு, பழனியம்மாள் காம்பவுண்டில் வசிப்பவர் பழனிசாமி, 32. நேற்று முன்தினம் மாலை வேலை முடித்து வீட்டுக்கு வந்தவர், தரைதளத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு, இரண்டாம் தளத்தில் உள்ள தன் வீட்டுக்கு சென்றார்.அதிகாலை, அவரது மனைவி, வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது, தங்களது டூவீலரை யாரோ ஒருவர் தள்ளிக் கொண்டு செல்வது தெரியவர, தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். அவர் வந்து பார்ப்பதற்குள், டூவீலருடன், மர்ம நபர் தலைமறைவானார். புகாரின் பேரில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement