dinamalar telegram
Advertisement

மழைக்கு ஒழுகும் பள்ளிக்கூடம் ஒதுங்கக்கூட முடியாத மாணவர்கள்

Share
மேலூர், நாவினிபட்டி அரசு துவக்கப்பள்ளி மழைக்கு ஒழுகுவதால் மாணவர்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது.இந்த ஊராட்சிக்குட்பட்ட நா.கோவில்பட்டியில் இப்பள்ளி 1958 முதல் செயல்படுகிறது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.செல்வராஜ்: வகுப்பறைகளில் மேல் தளம் முழுவதும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் மாணவர்கள் மீது விழுகிறது. அதனால் கட்டடம் வலுவிழந்து விழும் நிலையில் உள்ளதால் பிள்ளைகளை பயத்துடனே பள்ளிக்கு அனுப்புகிறோம். மழை பெய்தால்ஆசிரியர்கள் அருகில் உள்ள மந்தையில் மாணவர்கடள படிக்க வைக்கின்றனர்.விபரீதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.டி.இ.ஓ., நாராயணன் கூறுகையில், 'பள்ளியின் பாதிப்பு குறித்து ஓரிரு நாளில் நேரில் ஆய்வு செய்யப்படும்' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement