dinamalar telegram
Advertisement

ஜல்லிக்கட்டு விழா; 15 பேர் மீது வழக்கு

Share
புதுக்கோட்டை-புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே தச்சங்குறிச்சியில், நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடந்தது. ஏற்கனவே, பதிவு செய்யப்பட்ட 700 காளைகளில், 587 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன.மீதமுள்ள காளைகளை அவிழ்த்து விடுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், ஆத்திரமடைந்த மாட்டின் உரிமையாளர்கள், வாடிவாசல் அருகில் 50க்கும் மேற்பட்ட காளைகளை, ஒரே நேரத்தில் அவிழ்த்து விட்டனர்.காளைகள் சீறிப் பாய்ந்ததில் பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உட்பட பலர் அலறியடித்து ஓடினர்.தமிழக அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை மீறியதாக, ஜல்லிக்கட்டு நடத்திய விழா கமிட்டியினர் 15 பேர் மீது, கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement