dinamalar telegram
Advertisement

கட்டியும் பயனற்ற தண்ணீர் தொட்டி: மக்கள் வரிப்பணம் வீணாகும் அவலம்

Share
Tamil News
திருப்பூர்:சுண்டமேடு பகுதியில் கட்டிய மேல்நிலைத் தொட்டி பல ஆண்டாகியும் பயன்பாட்டுக்கு வராமல் வீணாக கிடக்கிறது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுண்டமேடு பகுதியில் கடந்த சில ஆண்டுகள் முன், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. அப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்டமிட்டு இத்தொட்டி கட்டப்பட்டது.ஆனால், கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் இத்தொட்டிக்கு குழாய் இணைப்பு கொடுத்து நீர் ஏற்றவோ, வீடுகளுக்கு சப்ளை செய்யவோ பயன்படுத்தப்படாமல் வீணாக கிடக்கிறது. இதையொட்டி தற்போது 5 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட புது மேல்நிலைத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி தரப்பில் கேட்ட போது, 'இப்பகுதி முருகம்பாளையம் ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்த போது, இத்தொட்டி கட்டப்பட்டது. இப்பணி முடிவடைந்த போது, இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.அதன் பின் 4வது குடிநீர் திட்டத்தில் இப்பகுதி இணைக்கப்பட்டு, இங்கு அதிக கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement