dinamalar telegram
Advertisement

பொங்கல் பண்டிகை: பிரதமர் வாழ்த்து

Share
புதுடில்லி-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நாட்டின் பல மாநிலங்களில் அறுவடை திருவிழாவும், சூரியனை வழிபடும் திருவிழாவும், வெவ்வேறு பெயர்களில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டன.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

புனித நதியில் நீராடியும், கோவில்களுக்கு சென்றும் சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:நம் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் இந்தியா முழுதும் வெவ்வேறு பண்டிகைகளை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மக்கள் அனைவருக்கும் இந்த நாளில் என் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.தமிழகத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பண்டிகையாக பொங்கல் விளங்குகிறது. இந்த சிறப்பான நாளில் உலகம் முழுதும் உள்ள தமிழ் மக்களுக்கு என் வாழ்த்துக்கள்.இயற்கையுடனான நம் பிணைப்பும், சமுதாயத்தில் சகோதரத்துவ உணர்வும் மேலும் வலுப்பெற கடவுளிடம் வேண்டுகிறேன். இவ்வாறு அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான திருநாள், அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement