dinamalar telegram
Advertisement

கோவில்களுக்கு சென்ற பஸ்கள் வேறு பகுதிகளுக்கு இயக்க முடிவு

Share
திருப்பூர்:பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பக்தர் சென்று வர வசதியாக, போக்குவரத்து கழகம் மூலம் பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர் மண்டலத்தில் இருந்து அமாவாசை, பண்டிகை தினங்களில் பண்ணாரி அம்மன் கோவில், ஆனைமலை, மாசாணியம்மன் கோவில், மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில், பழநி முருகன் கோவில் உள்ளிட்ட சிறப்பு மிக்க கோவில்களுக்கு பஸ் இயக்கப்படுகிறது.தொற்று பரவலை தடுக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்கள் வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று முதல் வரும், 18ம் தேதி வரை தொடர்ந்து, ஐந்து நாட்கள் வழிபாட்டு தலம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், விசேஷ நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் இயக்கத்தை நிறுத்த போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.தேவையிருப்பின், சுழற்சி முறையில் மேற்கண்ட பஸ்கள், மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement