dinamalar telegram
Advertisement

ஓய்வெடுக்கும் பின்னலாடை துறை

Share
திருப்பூர்:தொழிலாளருக்கு பண்டிகை விடுமுறை அளித்துள்ளதையடுத்து, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் ஓய்வெடுக்கின்றன.குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிக்கவேண்டியது கட்டாயமாகிறது. அதனால், பின்னலாடை நிறுவனங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குவது வழக்கம். ஆடை தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்களும்; வர்த்தகர்களிடமிருந்து ஆர்டர் பெறுவது, தயாரித்த ஆடைகளை அனுப்பிவைப்பது என, பின்னலாடை தொழில்முனைவோரும் எப்போதும் பம்பரமாக சுழல்கின்றனர்.பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு நேற்றுமுன்தினம் முதல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருகையின்றி, இயந்திரங்களில் ஓசையின்றி, பின்னலாடை துறை ஓய்வெடுத்து வருகிறது.திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 18 பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு உட்பட்டு, 470 சாய ஆலைகள் இயங்குகின்றன. சுத்திகரிப்பு மையங்கள், வாரத்தின் அனைத்து நாட்களும், நாள் முழுவதும் இடைவிடாது இயங்கி, சாயக்கழிவை சுத்திகரிக்கின்றன. இம்மையங்கள், இன்று முதல் பராமரிப்பு பணிகளை துவக்குகின்றன.பழுதடைந்த குழாய், மோட்டார், வால்வுகளை சரி செய்தல், கழிவுநீர் தோட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு, சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் சிறப்பாக இயங்க செய்ய தயார்படுத்துகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement