dinamalar telegram
Advertisement

எருது விடும் விழா களைகட்டியது கிருஷ்ணகிரி காளைகள் தயார்

Share
Tamil News
கிருஷ்ணகிரி-எருது விடும் விழாவுக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் தயாராகி வருகிறது.ஜல்லிக்கட்டு விழாவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், எருது விடும் விழா என்பது, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விழா.

விவசாயிகள், தாங்கள் வளர்க்கும் காளைகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, இரு கொம்புகளுக்கு இடையே பதாகைகளை கட்டுவர்.இவ்வாறு அலங்கரிக்கப்படும் காளைகளை ஊரிலுள்ள பொது மைதானத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில், சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் கட்டி, காளையை ஓட விட்டு தலையில் இருக்கும் வண்ண பதாகைகளை பறிப்பவர்களுக்கு பரிசு வழங்குவர். இதில் கலந்து கொள்ள இம்மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் பட்டாளம் திரண்டு வரும்.இதை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பெண்களும், குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக வருவர். இந்த விழாவுக்காக, கிருஷ்ணகிரி மட்டுமல்லாது, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் காளைகள் கொண்டு வரப்படுகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், எருது விடும் விழாவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் களை கட்டியுள்ளது. சூளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் எருது விடும் விழாவுக்கு அனுமதி கோரி, 500க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கியுள்ளனர்.எருது விடும் விழாவுக்காக, காளைகளை வளர்ப்போர், அதற்கு நீந்துதல், காளைகளை ஓட விட்டு பிடித்தல் உள்ளிட்ட பயிற்சிகளுடன் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, வாழைப்பழம், முட்டை, தானியம் கலந்த கூழ் உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement