dinamalar telegram
Advertisement

ஸ்ரீரங்கம் கோவிலில் நிலைத்தேர் உற்சவம்

Share
திருச்சி,;கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக, ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், தைத்தேரோட்டம் நிலைத்தேர் உற்சவமாக நடத்தப்பட உள்ளது. ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோவிலில், கடந்த 9ம் தேதி, தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 11 நாட்கள் நடைபெறும் தைத் தேர் உற்சவத்தின் போது, சுவாமி, உத்திர வீதிகளில் வலம் வந்து சேவை சாதிப்பார்.இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது. அதே போல், ஜனவரி 19ம் தேதி வரை நடைபெறும் தைத் தேர் உற்சவமும், கோவில் வளாகத்திலேயே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 17ம் தேதி காலை 4:30 மணி முதல் 5 மணிக்குள், நம்பெருமாளுடன் உபயநாச்சியார்களை தேரில் எழுந்தருள செய்து, ஆகம விதிப்படி நிலைத் தேர் உற்சவம் நடத்தப்பட உள்ளது, என்று கோவில் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement