dinamalar telegram
Advertisement

அபிநந்தன் போல் சாதனை படைக்கணும்! பைலட் பயிற்சிக்கு தேர்வான அருண் ஆசை

Share
Tamil News
''குரூப் கேப்டன் அபிநந்தன் போல் சாதனை படைக்க வேண்டும் என்பதே விருப்பம்,'' என்கிறார், போர் விமான பைலட் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கோவையை சேர்ந்த அருண், 22.பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இவரது தந்தை முருகையா, கோவை ஓட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தாயார் சுப்புலஷ்மி, இல்லத்தரசி. தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த முருகையா குடும்பத்தினர், 6 ஆண்டுக்கு முன் கோவைக்கு குடி பெயர்ந்துள்ளனர்.
கோவை மணி மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்படிப்பை முடித்த அருண், வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்றுள்ளார்.ஆர்வத்தை துாண்டிய பேச்சு!இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது, கார்கில் போரில் உயிர்நீத்த மேஜர் சரவணன் பற்றி, பேச்சுப் போட்டியில் பேசி, அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார்.அந்த சம்பவம்தான், பள்ளி மாணவரான அருண் மனதில் ராணுவ அதிகாரியாக வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தை ஏற்படுத்தியது.
பள்ளியில் படிக்கும்போதே, ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த அருண், கல்லுாரியில் படிக்கும்போது, என்.சி.சி.,யில் இணைத்து கொண்டார். 2019ல் டில்லியில் நடந்த என்.சி.சி., தால்சைனிக் முகாமில், அகில இந்திய அளவில் சிறந்த வீரராக தேர்வாகினார்.பாதுகாப்புத்துறை பணியிடங்களுக்கான சி.டி.எஸ்., தேர்விலும், விமானப்படை பொது சேர்க்கை தேர்விலும் பங்கேற்ற அருணுக்கு, சி.டி.எஸ்., தேர்வில் ஏழாவது முயற்சியில் பெரும் வெற்றி கிடைத்தது. கபூர்தலா நகரில் நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்ற, 2000 பேரில் தனி ஒருவராக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.விமான பைலட் வாய்ப்புடிசம்பர் மாதம் சென்னையில் பணியில் சேர்ந்து, பயிற்சியை துவக்கிய நிலையில் விமானப்படை தேர்வு வாரியத்தின் முடிவுகள் வெளியாகின. இதில் போர் விமான பைலட் பயிற்சிக்கு அருண் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
தனக்கு மிகவும் விருப்பமான போர் விமான பைலட் பணியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளதால், ஏற்கனவே சேர்ந்திருந்த ராணுவ அதிகாரி பணியில் இருந்து விலகியுள்ளார் அருண். இன்னும் ஒரு வாரத்தில் ஹைதராபாத்தில், பைலட் பயிற்சியில் சேர உள்ளார்.சிறு வயது முதலே, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அதற்கான ஆர்வத்தை துாண்டி, வழிகாட்டுதலாக இருந்தவர்கள் லெப்டினென்ட் ஈசன், கர்னல் தினேஷ் நாயர் ஆகியோர்தான். பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய, குரூப் கேப்டன் அபிநந்தன்தான் எனக்கு ஆதர்ச நாயகன். அவரைப் போலவே பணியில் சாதனை படைத்து, தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்,''-அருண்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement