dinamalar telegram
Advertisement

தெரு மின்விளக்குகள் பராமரிப்பு: ஊராட்சிகளுக்கு உத்தரவு

Share
விழுப்புரம்: ஊரக பகுதிகளில் தெரு மின்விளக்கு பராமரித்தல், கொள்முதல், தேர்வு செய்தல்களில் மறு உத்தரவு வரும் வரை உரிய நிபந்தனையை பின்பற்ற வேண்டும்.

கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:அரசு வழிகாட்டுதலின்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் ஊரக பகுதிகளில் தெரு விளக்குகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்படுகிறது. தெரு மின் விளக்குகளை பராமரிப்பது, கொள்முதல் செய்வது, தேர்வு செய்வதில் மறு உத்தரவு வரும் வரை, மூன்றடுக்கு ஊராட்சிகளை நிபந்தனைகளுடன் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது.

மூன்றடுக்கு ஊராட்சிகளில், எந்தவொரு நிதியிலிருந்தும் உயர்கோபுரம், சிறு மின்கோபுர விளக்குகள் ஒன்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களோடு கூடிய தெருவிளக்குகள் அமைக்க தடை செய்யப்படுகிறது.சோலார் உயர் கோபுர விளக்குகள் அமைத்தல் முழுவதும் மறுஉத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது. சோலார் எல்.இ.டி., விளக்குகள் கம்பங்களுடன் கொள்முதல் செய்வது தடை செய்யப்படுகிறது.

மீறி கொள்முதல் செய்யும் சம்பந்தபட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது விதிமுறைகள்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.உத்தரவை மீறி தெருவிளக்கு உபகரணங்களை கொள்முதல் செய்யும் தொடர்புடைய அலுவலரிடம் இருந்து இதற்கான செலவின தொகை முழுவதும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி துறை அலுவலர்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement