dinamalar telegram
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு 90 சதவீத கார்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

Share
Tamil News
கோவை:''கோவையில் உள்ள, 90 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது,'' என, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி கூறினார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கலுக்கு முன்பாக, அனைவருக்கும் கொடுத்து முடிக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். அதனால் நேற்று காலை, 8:00 முதல் மாலை 6:00 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொங்கல் தொகுப்பு வாங்கி சென்றனர்.அம்மன்குளம் பகுதியில் உள்ள, மூன்று ரேஷன் கடைகளின் அட்டைதாரர்களுக்கும் ஹவுசிங் யூனிட் பகுதியில் ஒரே இடத்தில் வைத்து பொருட்களை வழங்கியதால், கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், பலர் தொகுப்பை வாங்காமல் திரும்பி சென்றனர்.இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமாரி கூறுகையில், ''கோவையில், 90 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றனர். பொங்கல் தொகுப்பு வாங்காதவர்கள், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு வந்து வாங்கிக்கொள்ளலாம்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement