dinamalar telegram
Advertisement

ஓட்டம், நீச்சல் பயிற்சியில் குதிரைகள் ரேக்ளாவுக்கு அனுமதி கிடைக்குமா?

Share
Tamil News
ஆத்துார்-குதிரைகளுக்கு, அதன் உரிமையாளர்கள், நீச்சல் உள்ளிட்ட பயிற்சி அளித்து வருவதால், ரேக்ளா போட்டி நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக வீர விளையாட்டுகளில், ஜல்லிக்கட்டுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது குதிரை ரேக்ளா. அதற்காக குதிரைகளை வளர்த்து, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் வண்டிகளில் பூட்டி, போட்டியில் பங்கேற்கச் செய்வர். சேலம் மாவட்டத்தில், ஆத்துார் நகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையில் குதிரை ரேக்ளா போட்டி நடந்தது.

இதனால், ஆத்துார், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், ரேக்ளா போட்டிக்கு குதிரைகளை வளர்த்தனர். அவர்கள், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை பெற்று வருகின்றனர்.இப்போட்டி நடத்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், குதிரை வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதற்கான ஒத்திகையில், சேலம் - சென்னை, ஆத்துார் - பெரம்பலுார் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வசிஷ்ட நதியில் அதிகளவில் தண்ணீர் செல்வதால், நரசிங்கபுரம் உள்ளிட்ட தடுப்பணை பகுதிகளில், போட்டியில் பங்கேற்கும் குதிரைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுத்து வருகின்றனர். குதிரை உரிமையாளர்கள் கூறியதாவது:தமிழக அரசு, ரேக்ளா போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும். குதிரைகளை வளர்த்து வந்தாலும், போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன் தனி கவனம் செலுத்த வேண்டும்.உணவு, பயிற்சி என கவனிப்பை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான், குதிரைகளால் பந்தய துாரத்தை களைப்பின்றி கடக்க முடியும். இல்லை எனில் விரைவில் சோர்ந்து விடும். அதனால், இப்போதே பயிற்சி, ஒத்திகையை தொடங்கி விட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement