dinamalar telegram
Advertisement

இணையதளத்தில் அனுமதி கோப்புகள் அனுப்பப்படும்

Share
கோவை:வரும் காலங்களில் இணையதளம் வாயிலாகவே, கட்டட அனுமதி கோப்புகள் அனுப்பிவைக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி கூட்டரங்கில்,நடந்த நிகழ்ச்சிக்குப் பின்,மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளதாவது:நகரமைப்பு பிரிவில் மொத்தம், 2,194 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இதில், சம்பந்தப்பட்டவர்கள் பணம் செலுத்தி ஒப்புதலுக்காக வந்த கோப்புகள், 826, கட்டட உரிமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட கோப்புகள், 685, பணம் செலுத்தப்படாத கோப்புகள், 56 மற்றும் நிலுவையிலுள்ள கோப்புகள், 627; தற்போது, 141 கோப்புகள் பரிசீலனையில் உள்ளன.கடந்த நவ., 1ம் தேதி அன்று, 28 சதவீத கோப்புகளுக்கு கட்டட அனுமதி அளிக்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளால் இது, 82.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. மீதமுள்ளதில் தகுதியுடைய கோப்புகளுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும்.கூடுதல் ஆவணங்கள் தேவைப்படுமெனில், சம்பந்தப்பட்டவர்கள் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய பொறியாளர்கள் அறிவுறுத்த வேண்டும். வரும் காலங்களில் கட்டட அனுமதி வேண்டி விண்ணப்பித்தவர்கள், உரிய நகலுடன் மண்டல அலுவலகங்களுக்கு வரத்தேவையில்லை. இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கோப்புகள் அனுப்பப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement